விமானத்தில் ஏறும் அனுமதிச் சீட்டு கொடுத்த பெண் கையில் முத்தம் கொடுத்த பயணி கைது

சென்னை: சென்னை அனைத் துலக விமான நிலையத்தில் வெள் ளிக்கிழமை இரவு நேரத்தில் தனி யார் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரின் கையில் முத் தம் கொடுத்ததற்காக கடலூரைச் சேர்ந்த 34 வயது பயணியை விமானநிலைய போலிஸ் கைது செய்தது. 

துபாய் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த முகம் மது ஷரீஃப் என்ற அந்தப் பயணி, போலிசிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிந்த போலிஸ் அதிகாரிகள் ஷரீஃப்பை விசாரணைக் காவலில் வைத்தனர். 

துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கும் ஷரீஃப், கடலூர் அருகே இருக்கும் பண்ருட்டியைச் சேர்ந்தவர். அவர் துபாய் செல் வதற்காக வெள்ளிக்கிழமை சென்னை அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தார். 

விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டை (போர்டிங் பாஸ்) பெறுவதற்காக அவர் வரிசை பிடித்து நின்றார். வரிசையில் நின்ற பயணிகளுக்கு 23 வயது பெண் ஊழியர் ஒருவர் அந்த அனுமதிச் சீட்டுகளை வழங்கிக் கொண்டு இருந்தார். ஷரீஃப் அந்த ஊழியரிடம் இருந்து அனு மதிச் சீட்டைப் பெற் றுக்கொண் டதும் அந்தப் பெண்ணின் வலது கையை இறுக்கமாகப் பிடித்து கையில் முத்தம் கொடுத் தார். 

பெண் ஊழியர் தன்னுடைய கையை லாவகமாக விடுவித்துக் கொண்டு அது பற்றி விமான நிலைய அதிகாரிகளுக்குத் தக வல் தெரிவித்தார். அதற்குள்ளாக ஷரீஃப் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டார். 

பெண் ஊழியர் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து விமான நுழைவுச்சீட்டு முகப்புப் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புப் படச்சாதனங்கள் பரிசோதிக் கப்பட்டன. அந்தப் பெண் ஊழி யரின் கையில் இரண்டு தடவை ஷரீஃப் முத்தம் கொடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றதை அந்தப் படச்சாதனம் காட்டியது. 

பிறகு ஷரீஃப் விமான நிலை யத்தில் உள்நாட்டு முனையக் கட்டடத்தில் அதிகாரிகளிடம் பிடி பட்டார். பெண் ஊழியர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் விமான நிலைய போலிசார் ஷரீஃப் மீது வழக்குப் பதிந்து அவரை விசா ரணைக் காவலில் வைத்தனர்.