பணம் பறிமுதல்; எம்.பி.யிடம் விசாரணை

பணம் பறிமுதல்; எம்.பி.யிடம் விசாரணை

1 mins read

சேலம்: சேலம் மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியில் காரில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.49 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, டெல்லியிலிருந்து வந்த விமானத்தில் ரூ.20 லட்சத்தைக்கொண்டு வந்த ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர். தன் மகளின் மேற்படிப்புக்காக பணத்தை டெல்லியில் இருந்து எடுத்துவந்ததாக அவர் தெரிவித்தார்.