82 பிள்ளைகள்; தத்தெடுக்க 2,382 தம்பதியர்

சென்னை: தமிழ்நாட்டில் நாமக்கல் பகுதியில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப் பட்டுள்ள விவகாரம் பற்றி சிபிசிஐடி போலிசார் புலன்விசா ரணை நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில், அந்த மாநிலத் தில் 2,382 தம்பதியர் பிள்ளை களைத் தத்தெடுப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலமாக காத்து இருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

ஆனால் தத்தெடுத்துக் கொள்ள இப்போது 82 குழந்தை கள் மட்டுமே உள்ளதாக சமூக தற்காப்புத் துறை புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.