நூதன முறையில் தங்கம் கடத்தல்

நூதன முறையில் தங்கம் கடத்தல்

1 mins read

கோழிக்கோடு: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ள நிலையில் துபாயில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து கோழிக்கோடு வந்து சேர்ந்த பயணிகளை நேற்று காலை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது இரு ஆடவர்கள் தங்கள் உடலுக்குள் சிறு குண்டுகள் வடிவில் தங்கத்தை உருமாற்றம் செய்து மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைதாகி உள்ளனர்.