துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கோரிய காதல் தம்பதி

துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கோரிய காதல் தம்பதி

2 mins read
1fe1c78e-41de-44e8-a3ef-38143203d1a8
பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள  ஆட்டோ ஓட்டுநர் பிரவீன்குமார், இவரது மனைவி சரண்யா. படம்: ஊடகம் -

கும்பகோணம்: வேறு வேறு சாதி யைச் சேர்ந்த தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டு இருப்பதால் தங்களை கௌரவக் கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் தங்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி தரவேண்டும் என்றும் கோரி ஒரு காதல் தம்பதிகள் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தஞ்சை மாவட்டம், கும்ப கோணத்தை அடுத்த நாச்சியார் கோயில் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரவீன்குமார் (30). இவரது மனைவி சரண்யா (27). கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். வெவ்வேறு சமூகத் தைச் சேர்ந்த இவர்கள் ஓர் ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் இவர்கள் தஞ்சை காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.

மனுவில் "வெவ்வேறு சமூகத் தைச் சேர்ந்த நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆட்டோ ஓட்டுந ரான என்னை நாச்சியார் கோயில் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஒருவர், ரவுடிகள் பட்டியலில் சேர்த்து வழக்குப்பதிவு செய்தார். அதன் பிறகு அவரும் மற்ற சில காவலர் களும் அடிக்கடி என்னை தொலை பேசியில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்து வந்தனர். எனது மனைவிக்கும் காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போன நாங்கள் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற் கிடையே எங்களைக் கூலிப் படையை வைத்துக் கொலை செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக அறிந்தோம். தமிழகத்தில் தருமபுரி இளவரசன், உடுமலை சங்கர் உள்ளிட்டோர் ஆணவப் படு கொலை செய்யப்பட்டனர். அதே போல் எங்களையும் கொலை செய்ய முயற்சி செய்வதாகத் தெரி கிறது. எனவே பாதுகாப்புக் கருதி துப்பாக்கி வைத்துக் கொள்ள உரி மம் வழங்கவும் கேட்டுக்கொள் கிறேன்," என்று கூறியுள்ளனர்.