தண்டவாளம் அருகே கிடந்த குழந்தை

தண்டவாளம் அருகே கிடந்த குழந்தை

1 mins read

ஆழியூர்: விழுப்புரம் மாவட்டம், ஆழியூர் அருகே ரயில் தண்டவாளம் அருகில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் குழந்தை தொப்புள் கொடியுடன் கழுத்தை நெறித்துத் தூக்கி வீசப்பட்டுள்ளது. முட்புதரில் கிடந்த குழந்தை அழும் சத்தம் கேட்ட கௌசல்யா என்ற பெண், குழந்தையை மீட்டுக் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித் துள்ளார். இதையடுத்து தீவிர சிகிச்சை பெறும் குழந்தை யைத் தனக்கே தரும்படி கௌசல்யா கேட்டுள்ளார். இன்னும் பலரும் இக்குழந்தையைத் தத்தெடுக்க முன்வந்துள்ளனர்.