சென்னையில் 70 ஆண்டுகளில் இல்லாத கடும் குடிநீர் பஞ்சம்

சென்னையில் 70 ஆண்டுகளில் இல்லாத கடும் குடிநீர் பஞ்சம்

2 mins read

சென்னை: சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்களில் தற்போது 1.3% நீர் மட்டுமே உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித் துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே சென்னை நகருக்குக் குடிநீர்வரத்துக் குறைந்துள்ளது. இதற்காக சென்னை குடிநீர் வாரி யம் பல நடவடிக்கைகள் எடுத்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளது.

இதனால் தண்ணீர் போதுமான அளவில் கிடைக்காமல் சென்னை மக்கள் கடும் அவதிப்பட்டு வரு கின்றனர்.

கோடைக்காலம் வந்துவிட்டாலே சென்னையில் தண்ணீர் பிரச்சினை தலைகாட்டத் தொடங்கிவிடும். நடப்பாண்டும் இதே நிலைதான் தொடர்கிறது. சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

அவற்றின் மொத்த கொள்ள ளவில் வெறும் 1.3% அளவிற்கு மட்டும் தற்போது தண்ணீர் இருப்பு உள்ளது. இது கடந்த 74 ஆண்டுகளில் 5வது முறையாக தண்ணீர் இருப்பில் படுமோசமான நிலைக்கு சென்னை தள்ளப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

"பருவமழை பொய்க்கும் காலங்களில் எல்லாம் அடுத்து வரும் கோடைக் காலத்தில் சென் னையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது. தற்போது அனைத்து நீர் நிலைகளிலும் 1.3% நீர் இருந்தாலும் விரைவில் அது வறண்டு போகலாம். இதுபோன்ற ஒரு பஞ்சம் கடந்த 70 ஆண்டு களில் ஏற்பட்டது இல்லை" என குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் கூறுகையில், "சென்னை நக ருக்கு இப்போதுள்ள நிலையில் வீராணம் நீர் மட்டுமே கைகொடுக்க உள்ளது," என்றார்.