ஒரே கட்டுப்பாட்டு அறையின் கீழ் 2.55 லட்சம் புகைப்படக் கருவிகள்

ஒரே கட்டுப்பாட்டு அறையின் கீழ் 2.55 லட்சம் புகைப்படக் கருவிகள்

1 mins read

சென்னை: சென்னை முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 2.55 லட்சம் கண்காணிப்பு புகைப்படக் கருவிகளை ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்காக தலைமை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு கோடி மக்கள்தொகை கொண்ட சென்னைப் பெருநகரில் தங்கச் சங்கிலி பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.