தமிழக முதல்வர்: வாக்கு எண்ணும் பணியில் கவனம்

வாக்குகளை எண்ணும் பணியில் கவனம் தேவைப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களில் நிகழவிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவின் சார்பாகச் செல்லும் முகவர்களுக்கு முதல்வர் பழனிசாமி இவ்வாறு கூறியுள்ளார். மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையில் அதிகாரிகள் அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் கருத்துக்கணிப்புப் பற்றி கருத்துரைத்த திரு பழனிசாமி அதனை “கருத்துத் திணிப்பு” என வர்ணித்திருக்கிறார்.
அதிமுக குறைந்த இடங்களைப் பிடிக்கும் என முன்னுரைத்திருக்கும் கருத்துக் கணிப்பு ஒன்றைப் பற்றி அவர் இவ்வாறு கூறியுள்ளார். கருத்துக் கணிப்புகளுக்கு முரணாக கடந்த தேர்தலில் தாம் பெற்றுள்ள வெற்றியைச் சுட்டினார் திரு பழனிசாமி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்