திருச்சி: தொலைக்காட்சி பார்த்த தால் மகளைக் கண்டித்து அடித் துத் தாக்கியதில் உயிரிழந்தார். தாய் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், காட்டுப்புத் தூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நித்ய கமலா என்பவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் முத் துப்பாண்டியன்.
இவர்களது 5 வயது மகள் லத்திகாஸ்ரீ வீட்டில் தொலைக் காட்சி பார்த்துக்கொண்டிருக்க, அடிக்கடி ஏன் தொலைக்காட் சியை பார்க்கிறாய் என்று கேட்டு மகளை கமலா அடித்துள்ளார். இதனால் காயமடைந்த சிறுமி மயங்கி விழுந்தாள்.
இதையடுத்து சேலம் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்ட லத்திகாஸ்ரீ உயிரிழந்தாள்.
இதையடுத்து நடந்த விசார ணையில், கமலாவிற்கும் தேனி மாவட்டம் போடிப் பகுதியைச் சேர்ந்த பிரசன்னாவிற்கும் ஏற் கெனவே திருமணமாகி லத்திகா ஸ்ரீ பிறந்துள்ளார். பின்னர் இரு வரும் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து முத்துப்பாண்டியன் என்பவரை இரண்டாவதாக கமலா திரு மணம் செய்துகொண்டுள்ளார்.
ஒருவேளை முத்துப்பாண் டியன் அடித்ததால் குழந்தை இறந்திருக்கலாம் என்றும் அவரைக் காப்பாற்றவே கமலா தன்மீது பழியைப் போட்டுக் கொண்டாரோ என்றும் போலிசார் சந்தேகிக்கின்றனர். விசாரணை தொடர்கிறது.

