முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும்

தமிழகத்தில் பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என அம்மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார். இந்திய நேரப்படி நாளை காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகளையும் மின்னணு இயந்திர வாக்குகளையும் எண்ணும் பணி தொடங்கும் என்று அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 45 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படும். 

ஒவ்வொரு சுற்றின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும்  வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வேட்பாளர் களுக்கும் அவர்களுடைய முகவர்களுக்கும் அனுப்பப்படும் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. முதல் சுற்றின் முடிவுகள் காலை சுமார் 10 மணி அளவில் தெரிய வரும். மாலை நேரத்திற்குள் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி நிலவரம் தெரிந்துவிடும். பெரிய தொகுதியாக இருந்தால் வேட்பாளர்களின் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு இரவு வரை ஆகும் என்று கூறப்படுகிறது.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon