'மூன்று தினங்கள் அனல்காற்று வீசும்'

'மூன்று தினங்கள் அனல்காற்று வீசும்'

2 mins read

சென்னை: அடுத்தடுத்த நாட் களில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் அனல்காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தமிழகத்தில் இப்போது முதல் அடுத்த மூன்று நாட் களுக்கு அனல்காற்று வீசும். அதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்லவேண் டாம், அப்படி செல்வதாக இருந்தால் பாதுகாப்பான பய ணங்களை மேற்கொள்ளவும்.

"வெயிலில் செல்லும்போது தண்ணீர் குடுவை, முகம், தலையை மூடுவதற்கு துணி ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்வது நல்லது," என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

இம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சூறைக் காற்றுடன் கூடிய மிதமான மழையும் சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் அதேசமயத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் இப்போது முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து அனல்காற்று வீசும்.

"சென்னையைப் பொறுத்த வரை அனல்காற்று வீச வாய்ப் புள்ளதால் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப் பம் பதிவாகலாம்," என குறிப் பிடப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழைக் குச் சாதகமான சூழல் தெற்கு வங்கக் கடல், வடக்கு அந்த மான் கடல் பகுதிகளில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டுக்கான தென் மேற்குப் பருவமழை ஜூன் 6ல் தொடங்கும் என்றும் தமிழகத் தில் நிலவும் அனல் காற்று அடுத்த 3 நாட்களுக்குத் தொடரும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. கன்னியா குமரி, நீலகிரி, கோவை, திண் டுக்கல், தேனி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.