106 மொழிகளில் பேசி, எழுதும் சென்னை சிறுவன்

106 மொழிகளில் பேசி, எழுதும் சென்னை சிறுவன்

1 mins read

சென்னை: சென்னையைச் சேர்ந்த 8 வயது நியல் தொகுலுவா (படம்) என்ற சிறுவன் 106 மொழிகளில் பேசுகிறார்; எழுதுகிறார். இதைப் பார்க்கும் மக்கள் ஆச்சரியத்தில் அசந்து போகிறார்கள்.

தனது பெற்றோருக்கு வார்த்தை களை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதையும் இச்சிறுவனே கற்றுக் கொடுக்கிறாரம்.

இணையம், யு டியூப் காணொ ளிகள் உதவியுடன் மொழிகளைக் கற்றுத்தேறியுள்ள இச்சிறுவன், அனைத்துலக உச்சரிப்பு ஒலி முறைகளையும் கற்றுக்கொண் டுள்ளார்.

"மொழிகள் மீதான விருப்பம் என்பது எப்படி என்னிடம் தொடங் கியது எனத் தெரியவில்லை. என் னால் 106 மொழிகளில் பேசவும் எழுதவும் முடியும். 10 மொழிகளில் சரளமாகப் பேசுவேன், தற்போது ஐந்து மொழிகளைப் படித்துவருகி றேன்," என்று கூறியுள்ளார்.