சென்னை: பல்லாயிரம் கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட பல பிரிவினரும் இணைந்து விற்பனை செய்து பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டதாக சமூகநல ஆன்மீகவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, சிறப்புமிக்க இக்கோயில் சொத்துகளைக் காப்பாற்ற நீதி மன்றமே தாமாக முன்வந்து நட வடிக்கை எடுத்தால் மட்டுமே மிஞ்சியிருக்கும் கோயில் சொத் தையாவது காப்பாற்றமுடியும் என் றும் அவர்கள் கூறியுள்ளனர்.
"சென்னை விமான நிலையத் துக்கு எதிரே உள்ள மலையில் அமைந்துள்ள திரிசூலம் கிராமத் தைச் சேர்ந்த திரிச்சுரமுடையார் எனும் திரிசூல நாதர் கோயிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கும் மேலான பல்லாயிரம் கோடி மதிப் பிலான நிலங்களை கூறுபோட்டு விற்பனை செய்துள்ளனர். இதில் அறநிலையத்துறை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக் கும் பங்குள்ளது.
"கோயில் நில விற்பனையில் ஈடுபட்ட அறநிலையத்துறை, ஊராட்சி நிர்வாகம், மின்வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை களில் பணியாற்றிய அலுவலர்கள், அதிகாரிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும். அவர் களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவேண்டும்," என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறிய போது, "காஞ்சி மாவட்டம், ஆலந் தூர் வட்டம், திரிசூலம் வருவாய் கிராமத்தில் 60 ஏக்கருக்கும் மேற்பட்ட நன்செய், 20 ஏக்கருக் கும் மேற்பட்ட புன்செய் நிலங்கள் திரிசூலநாதர் கோயிலுக்குச் சொந்தமானவை. இதில் 70 ஏக்க ருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள் ளூர் அரசியல்வாதிகள், ஆக்கிர மிப்பாளர்களால் கூறுபோட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. கோயில் பட்டா நிலத்தை 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி விற்பனை செய்துள்ளனர். இதற்கு கோயில் நிர்வாகம், ஊராட்சி, மின் வாரியம் ஆகியவை உடந்தையாக இருந்து வருகின்றன. ஆக்கிரமிக் கப்பட்டுள்ள இடத்தில் சகல வசதி களுடன் அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டப்பட்டு வருகின்றன.
"இப்பிரச்சினையில் இனியும் கண்மூடியபடி இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
"திரிசூலநாதர் கோயில் நில ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை அறநிலையத்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே கோயில் சொத்துகளைக் காப்பாற்ற நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மிஞ்சியிருக்கும் கோயில் சொத்தையாவது மீட்கமுடியும்," என்று சமூக நல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
கேட்டுக்கொண்டுள்ளனர்கூறியுள்ளனர்.

