மனநலம் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்கு உதவும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்

மனநலம் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்கு உதவும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்

1 mins read

சென்னை: நடிகர் சிவகார்த்தி கேயன் நடித்த திரைப்படங்கள் மூலமாக மனநலம் பாதிக்கப் பட்டோருக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது. அவரது படங்களில் அதிக நகைச்சுவை இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சென்னையில் உள்ள மனநல மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு என பொழுதுபோக்குக்காகவும், சிகிச்சையின் ஒரு பகுதியாகவும் திரைப்படங்கள் காண்பிக்கப்படு கின்றன.

அதிக வன்முறை உள்ள படங்களை தவிர்த்து விடுவதாக வும் இத்திரைப்படங்கள் மூலம் புதிதாக வந்துள்ள கலைஞர்கள் குறித்து நோயாளிகள் அறிந்து கொள்ள முடிகிறது என்றும் கூறுகிறார் மனநல மைய இயக்குநர் பூர்ணா சந்திரிகா.

"மருத்துவர்களால் தேர்வு செய்யப்பட்ட படங்களை மட் டுமே திரையிடுவோம். சில புது விவரங்களை நோயாளிகள் தெரிந்துகொள்வதால் அது பற்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே திரைப்படங்களைத் திரையிடுவதும் சிகிச்சையின் ஓர் அங்கமாகி விடுகிறது.

"நடிகர் சிவகார்த்திகேயனின் படங்களைத் திரையிடுகிறோம். அவற்றில் நகைச்சுவை அதிகம் இருப்பதால் பெண் நோயாளிகளுக்குத் திரையிடுகிறோம்," என்கிறார் பூர்ணா சந்திரிகா.