தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத் தில் பலியானோருக்கு தூத்துக் குடியில் நேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையொட்டி அம்மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் பாது காப்புப் பணிக்காக மூவாயிரம் போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, மக்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட முயன்றதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலி சார் தடியடி நடத்தினர்.
இதன் பிறகும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலாத நிலையில், போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படு காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட் டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றன.
இச்சமயம் அசம்பாவித சம்ப வங்கள் ஏதும் நிகழக்கூடாது என்பதற்காக காவல்துறை பல் வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டது. இதையடுத்து தூத் துக்குடிக்கு அருகில் உள்ள விருதுநகர், சிவகங்கை, கன் னியாகுமரி, மதுரை, ராமநாத புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலிசார் வரவழைக்கப் பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரா னவர்களைத் துன்புறுத்துவது ஏன்? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில் போராட்டக்காரர் கள், துப்பாக்கிச்சூட்டில் இறந்தோ ரின் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந் தது. இம்மனுவை நேற்று விசாரித்த போதே நீதிபதிகள் இக்கேள்வியை எழுப்பினர்.
மேலும், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான கைது நடவடிக்கை களை நிறுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

