சங்கிலி பறிப்பு தொடர்பாக கோவில் பூசாரி கைது

சங்கிலி பறிப்பு தொடர்பாக கோவில் பூசாரி கைது

1 mins read

சென்னை: தங்கச் சங்கிலிகள் அணிந்து கோவிலுக்கு வரும் பெண்கள் குறித்து திருடர்களுக்கு தகவல் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கோவில் பூசாரி கைதானார். மேலும் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட நால்வர் பிடிபட்டுள்ளனர்.

சென்னை திருவொற்றியூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார் ரூபன். நாற்பது வயதான இவர், சங்கிலி பறிக்கும் கும்பலுக்கு தலைவனாக வும் செயல்பட்டு வந்துள்ளார்.

கோவிலுக்கு வரும் பெண்க ளிடம் அன்பாகப் பேசி, அவர்கள் எந்த வழியாக வீடு திரும்ப உள்ளனர் எனும் விவரத்தை தெரிந்துகொள்வது இவரது வழக்கம்.

பின்னர் அத்தகவலை தனது கூட்டாளிகளுக்கு தெரிவிப்பார் ரூபன். அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்கள் செல்லும் பாதையில் காத்திருந்து சங்கிலியைப் பறித்துச் செல்வர்.

அண்மையில் திருவொற்றியூரில் நிகழ்ந்த சங்கிலிப்பறிப்பு சம்பவம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்தபோது, சங்கிலி பறிக்கச் சென்ற இருவரது அடையாளங்கள் தெரிய வந்தது.

இதன் மூலம் இருவரையும் போலிசார் கைது செய்தனர். விசாரணையின்போது அவர்கள் அளித்த தகவல்களின் அடிப் படையில், மேலும் இருவர் கைதா கினர்.

இந்நிலையில் தங்களுக்குத் தலைவனாக செயல்பட்டது பூசாரி ரூபன் என்று அவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.