தூத்துக்குடி: முன்னிலையில் கனிமொழி

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தின் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிப்பதாகத் தமிழக ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் ஏழு கட்டங்களும் முடிந்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணி நிலவரப்படி திமுக கூட்டணி ஒன்பது சட்டமன்ற  இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு இதுவரை நான்கு இடங்கள் கிடைத்துள்ளன.