தமிழகத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தின் 45 வாக்கு எண்ணிக்கை நிலையங்களில் வாக்குகளை எண்ணும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குமான வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளில் நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை இந்தியாவில் இன்று காலை 8 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி 10.30 மணிக்கு) தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க 88 அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர். 16,000 போலிசாரும் 1,520 துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முடிவுகள் இரவு நேரத்திற்குள் உறுதி செய்யப்படும் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.