ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி பயணம்

சென்னை: தமிழக முதல்=அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்=அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காலையில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அங்கு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களை இருவரும் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் நாளை சபாநாயகர் முடிவு செய்வார்’

சென்னை: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள் அனைத்தும் தமிழக அரசிதழில் விரைவில் வெளியாகும். அவர்கள் பதவி ஏற்பதற்கான நாளையும் நேரத்தையும் சபாநாயகர் முடிவு செய்வார். தங்களுக்கான நேரத்தில் சபாநாயகர் முன்னிலையில் உறுதி மொழி படித்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கலாம். 

இதற்கு குறிப்பிட்ட காலக்கெடு கிடையாது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எச்.வசந்தகுமார் ஏற்கெனவே நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர் எம்.பி.யாக நீடிக்க வேண்டுமானால், அரசியல் சாசனப் பிரிவின்படி 14 நாட்களுக்குள் எம்.எல்.ஏ. பதவியைத் துறக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்.பி. பதவி பறிபோய்விடும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon