சென்னை: தேர்தலில் தேனி தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. திமுக கூட்டணிக் கட்சிகள் (விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியைத் தவிர), அதிமுககூட்டணிக் கட்சிகளை அதிக வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளில் யார் யாரை நியமிப்பது என்பது பற்றி அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ராசா உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலை மையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

