சென்னை: தேர்தலில் தோற்றது குறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "தேர்தல் போரில் பா.ம.க. தோற்றாலும் களத்தை இழக்கவில்லை," என்று கூறியுள்ளார்.
"தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பல காரணங்கள் உள்ளன. அவை என்னவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பே இறுதியானது என்ற அடிப்படையில் இந்தத் தேர்தல் முடிவுகளை பா.ம.க. ஏற்றுக்கொள்கிறது.
தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சரிசெய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை கட்சி மேற்கொள்ளும். தேர்தல் முடிவுகளை எண்ணி பா.ம.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் கவலைப்பட வேண்டாம் என்று டாக்டர் ராமதாஸ் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

