அமெரிக்கப் பெண்ணை மணக்கும் தமிழக பொறியாளர்

அமெரிக்கப் பெண்ணை மணக்கும் தமிழக பொறியாளர்

1 mins read
5a4aa245-c0d0-4db6-aae3-b52652ace79f
நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பிரட்டி, சூரியபிரகாஷ். படம்: ஊடகம்  -

பெரம்பலூர்: அமெரிக்க இளம் பெண்ணுக்கும் திட்டக்குடி பொறியாளருக்கும் இடையே ஃபேஸ்புக் மூலம் மலர்ந்த காதல் இப்போது பெற்றோர் முன்னிலையில் நிச்சய தார்த்தத்தில் முடிந்துள்ளது. விரைவில் இவர்களது திருமணம் தமிழ் கலாசாரப்படி நடக்க உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடக்குக் கரோலினா மாகாணம், சான் போர்டு நகரைச் சேர்ந்தவர் பிரட்டி, 22. இவர் சில மாதங்களுக்கு முன் தமிழ் கலாசாரம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்தாக பெற் றோருடன் சென்னைக்கு வந்தார்.

சென்னையில் தங்கி ஆய்வு செய்து வந்த பிரட்டி, தமிழ் கலா சாரம் பற்றி தகவல் தெரிந்தவர்கள் பதிவு செய்யுமாறு 'பேஸ்புக்' பதி வில் தெரிவித்திருந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், அகரம் சீகூர் கிராமத்தைச் சேர்ந்த பொறி யாளர் சூரியபிரகாஷ், 25, தமிழ் கலாசாரம் பற்றிய தகவல்கள், படங்கள், காணொளிகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார். இப்பதிவைப் பார்த்த பிரட்டிக்கு சூரியபிரகா‌ஷுடன் நட்பு மலர்ந்தது. நாளடைவில் காதலிக்கத் துவங் கிய இருவரும் கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சய தார்த்தம் செய்துகொண்டனர்.

பிரட்டி கூறியபோது, "தமிழ் கலாசாரம், உடை, உணவு, அன் போடு பழகும் விதம் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் தமிழ் கலாசாரப்படி சேலை கட்டி வருகிறேன். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை மணக்க விரும்பினேன். அப்போதுதான் சூரியபிரகா‌ஷுடன் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு, நிச்சய தார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறினார்.