எம்எல்ஏ பதவியை இன்று துறக்க உள்ள வசந்தகுமார்

எம்எல்ஏ பதவியை இன்று துறக்க உள்ள வசந்தகுமார்

1 mins read

சென்னை: கன்னியாகுமரி எம்.பி. பதவியைத் தக்கவைத்துக் கொண்டு, நாங்குநேரி எம்எல்ஏ பதவியை விட்டு விலகுவ தாக காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, திமுக தலைமையகமான அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார் கூறுகையில், "சபாநாயகர் நேரம் ஒதுக்கிக் கொடுத்தவுடன் இன்று நான் எம்எல்ஏ பதவியைத் துறக்க உள்ளேன். கன்னியாகுமரி எம்.பி. பதவியைத் தக்கவைத்துக் கொள்வேன்," என்றார்.