நச்சு வைத்து நாய்களைக் கொன்றதாக மீன் வியாபாரி மீது பொதுமக்கள் புகார்

நச்சு வைத்து நாய்களைக் கொன்றதாக மீன் வியாபாரி மீது பொதுமக்கள் புகார்

1 mins read

திருப்பூர்: திருப்பூர் கொங்கணகிரியில் கடந்த இரண்டு நாட்களில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி கோபால் மீது அப்பகுதி மக்கள் போலிசில் புகார் அளித்துள்ளனர். தினமும் சாலையில் செல்லும்போது நாய்கள் அவரைப் பார்த்துக் குறைத்ததால் ஆத்திரமடைந்த அவர், மீன் பிடிக்க உபயோகிக்கும் மருந்தை உணவில் கலந்து நாய்களுக்கு வைத்ததாகக் கூறப்படுகிறது.