மானாமதுரை: மானாமதுரை அருகே வைகை ஆற்றங்கரை ஓரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த அமமுக ஒன்றியச் செயலாளர் சரவணன் யாரென்று தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 40. டிடிவி தினகரனின் அமமுக ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார்.
பலரும் நடைப்பயிற்சி செய்யும் காலை நேரத்தில் கொலை நடந்திருப்பது மானாமதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அண்மையில் நடந்த மானாமதுரை இடைத்தேர்தலில் அமமுகவிற்காக சரவணன் தீவிர பணியாற்றினார். சரவணனுக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

