திருநாவுக்கரசர்: அதிமுக தொண்டர்கள் ஆதரித்தனர்

திருநாவுக்கரசர்: அதிமுக தொண்டர்கள் ஆதரித்தனர்

1 mins read

சென்னை: அதிமுகவினரும் தமக்கு வாக்களித்ததால்தான், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி யில் 4.59 வாக்கு வித்தியாசத்தில் தம்மால் வெற்றி பெற முடிந்தது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இத்தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"அதிமுகவின் வாக்கு வங்கி யாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதி யில் கூட 50 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வாக்குகள் காங்கிரசின் கை சின்னத்துக்கு கிடைத்துள்ளது.

"உண்மையான அதிமுகவினர் வாக்களித்ததால்தான் இந்த வெற்றி எனக்கு சாத்தியமானது. தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வேன்," என்றார் திருநாவுக்கரசர்.