ரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசிவிட்டு தப்பியவருக்கு வலைவீச்சு

ரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசிவிட்டு தப்பியவருக்கு வலைவீச்சு

2 mins read

சென்னை: ஆடவர் ஒருவர் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கப் பணம் உள்ள 3 பைகளை சாலை யில் வீசிவிட்டு போலிசாரிடம் சிக்காது இருசக்கர வாகனத் தில் தப்பிச் சென்றது சென்னை யில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் இரவு கோட்டூர்புரம் பகுதியில் போலிசார் வழக்கமான வாகனச்சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆடவர் ஒருவர் இருசக்கர வாகனம் ஒன்றில் அப்பகுதியைச் சுற்றி வந்தார்.

இருமுறை அவரைக் கண்டும் காணாமல் இருந்த போலிசாருக்கு, மூன்றாவது முறையாக அந்நபர் கண்ணில் பட்டதும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரைத் தடுத்து நிறுத்தி விசாரிக்க முயன்றனர்.

ஆனால் அந்நபரோ தனது வாகனத்தை நிறுத்தாமல், வேக மாக போலிசாரைக் கடந்து சென் றார். இதையடுத்து போலிசார் இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்றனர்.

நீண்ட தூரம் போலிசார் தன்னை விடாமல் துரத்தி வந்த நிலையில், அந்த ஆடவர் தனது வாகனத்தில் இருந்து மூன்று பைகளை சாலையில் வீசியெறிந் தார். இதனால் போலிசாரின் கவனம் திசை திரும்பிய நிலையில், அந்த ஆடவர் தப்பிச் சென்றார். சாலையில் கிடந்த மூன்று பைகளையும் ஆய்வு செய்த போது, அவற்றில் ரூ.1.56 கோடி ரொக்கப்பணம் இருப்பது தெரிய வந்தது.

இது யாருடைய பணம், எதற்காக, எங்கு கொண்டு செல்லப்பட்டது? எனும் விவரம் தெரியவில்லை.

சந்தேக நபர் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் இருந்திருக்க வாய்ப் புள்ளதால் அங்குள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்புக் கேமராக்களில் அவ ரது உருவம் பதிவாகி இருக்கும் என்பதால் போலிசார் தற்போது அவற்றை ஆய்வு செய்து வருகின் றனர். தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு இவ்வளவு பெரிய தொகை போலிசாரிடம் சிக்கி உள்ளது.