மஞ்சுவிரட்டு: பரிசுகளை அள்ளிய காளைகள், வீரர்கள்

மஞ்சுவிரட்டு: பரிசுகளை அள்ளிய காளைகள், வீரர்கள்

1 mins read
e464c75e-c141-4eb2-9661-5db1be472d84
-

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் ஏராளமான காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மஞ்சுவிரட்டை நேரில் கண்டுகளித்தனர்.

காளைகள் முட்டியதில் 5 வீரர்கள் காயமடைந்தனர். வீரர்களுக்கும் யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

படம்: தகவல் ஊடகம்