சுடச் சுடச் செய்திகள்

கொள்ளையடித்த வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட கொள்ளையர்கள்

செங்கல்பட்டு: கொள்ளையடித்த வீட்டில் முட்டை ஆம்லெட் சமைத்து சாப்பிட்டுச் சென்ற சம்பவம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டில் வசித்து வரும் வாசுதேவன், கடந்த 23ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்ட கொள்ளையர்கள், சிறிய கடப்பாறையால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் 25 பவுன் நகை, வைர மோதிரம், மின்னணுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளனர். புறப்படுவதற்கு முன்பு வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்த பழங்கள், முட்டைகளை எடுத்து ஆம்லெட் சமைத்து ஆற அமர சாப்பிட்டுவிட்டுச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon