சுடச் சுடச் செய்திகள்

‘கராத்தே’ வீரர்களுக்குக் கைகொடுத்த எடப்பாடி

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெற்ற உலக ‘கராத்தே’ வெற்றியாளர் கிண்ணப் போட்டிக்குச் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டபோது அவர்களுக்குத் தேவைப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

தமிழகத்திற்குப் பாதுகாப்பாகத் திரும்ப தமிழ்நாடு மாநில அரசு அளித்த உதவிக்காக அந்த விளையாட்டு வீரர்களும் அவர்களது பெற்றோரும் முதல்வர் பழனிச்சாமியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்கள் நன்றியைத் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணிபுரிந்த தமிழர்களை இவ்வாறு பத்திரமாக மீட்டு சொந்த நாட்டிற்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon