திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அறையிலேயே பதவியேற்பு

திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அறையிலேயே பதவியேற்பு

1 mins read
415ce740-94d0-47e7-9ff6-d2b8854cc415
-

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அறையில் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 13 இடங்களில் திமுகவும் ஒன்பது இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன. இதற்கிடையே, இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களாக பதவியேற்க சட்டமன்ற செயலரிடம் திமுக அனுமதி கோரியிருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் தமது அறையில் 13 பேருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்போது சட்ட மன்றத்தில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.