இன்றோடு முடிவுக்கு வருகிறது அக்கினி நட்சத்திரம்

இன்றோடு முடிவுக்கு வருகிறது அக்கினி நட்சத்திரம்

1 mins read
cd7606df-ad8c-4b6c-a3a3-6b5eddbb0cbf
கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் வெயில் சுட்டெரிக்கும் நகரங்களில் பொதுமக்கள் தங்கள் முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்லும் காட்சியைப் பரவலாக காண முடிந்தது. படம்: ஏஎஃப்பி -

சென்னை: நாடு முழுவதும் கத்திரி வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில், இன்றோடு அக்கினி நட்சத்திரம் முடிவுக்கு வருகிறது. இதனால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் தேதி முதல் அக்கினி நட்சத்திர காலம் தொடங் கியது. அன்று தொடங்கி இன்று வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வரு கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வெயில் கொளுத்தும் சமயங்க ளில் வெளியே செல்பவர்கள் அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, தலையையும் முகத்தையும் துணியால் மூடிக்கொண்டு செல் வது வாடிக்கையாகி உள்ளது.

இந்த ஆண்டு வெப்பச்சலனம் காரணமாக அதிக மழை பெய்ய வில்லை எனக் கூறப்படுகிறது. அக்கினி நட்சத்திரம் முடிவுக்கு வருவதால், இனி படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கலாம்.