புதுடெல்லி: விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்க நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து இலங்கையைச் சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய அரசு தடை செய்தது.
இந்த தடை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்தத் தடை நீட்டிக்கப்பட்ட நிலையில், அந்த இயக்கம் மீதான தடையை நீடிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க ஒரு தீர்ப்பாயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து ஆராய உள்ளது.

