‘தோற்றது தேர்தல் ஆணையம்’

மதுரை: நாடாளுமன்றத் தேர்த லில் தேர்தல் ஆணையம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித் துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களைப் பொறுத்த வரை நடந்து முடிந்த நாடாளு மன்ற, சட்டசபை இடைத்தேர்த லில் வெற்றிதான் கிடைத் துள்ளது. நாங்கள் சாதாரண குடிமக்களாகப் பிறந்து புரட்சி கரமான அரசியலைச் செய்து வருகிறோம்.

“இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல் வியைச் சந்தித்துள்ளது. கடை களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வருகிறா கள். ஆட்டோவில் வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு வருகிறார்கள். சிறுவன் வாக்கு ப்பதிவு எந்திரத்தை தூக்கிச் செல்கிறான். விடுதிகளில் வாக் குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. இந்தக் காட்சிகளை சமூக ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.

“தேர்தலின்போது வாக்காளர் களுக்குப் பணம் கொடுக்கப்பட் டுள்ளது. இதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“நாம் வளர்ச்சி பெற்று வருகிறோம் என மோடி பேசி வருகிறார். ரூ. 3,000 கோடியில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்திருக்கிறார்கள். அதே குஜராத்தில் மாடியில் தீ விபத்து ஏற்படும்போது அதனை ஏணி வைத்து தண்ணீரை பீய்ச்சி அணைக்க நம்மிடம் வசதி இல்லை. இதனால் 28 மாணவர்கள் இறந்துள்ளனர். பேரிடர் காலங்களில் மக்களைக் காப்பாற்றுவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத நாடாக இந்தியா உள்ளது.

“தேர்தலில் கமல்ஹாசன் எங்கள் வாக்கைப் பிரித்திருப்பார் என்று நாங்கள் நினைக்க வில்லை. 50 ஆண்டுகளாக நடித்த ஒருவர் புதிதாக அரசியலுக்கு வருகிறார். அவருக்கு ஓட்டு போட்டு பார்ப்போம் என மக்கள் நினைத்திருக்கலாம்.

“இங்கு என்ன நடந்திருக் கிறது என்று பார்த்தால், பாஜக வெற்றி பெறக்கூடாது என்ற கருத்தை நாங்கள் பரப்புரையில் அதிகமாக எடுத்துரைத்தோம். அதற்கான பலனை திமுக அறுவடை செய்துள்ளது,” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!