சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்து வதில் கவனக்குறைவாக இருந்த 500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் மாணவர் களின் உயர்கல்வியை நிர்ணயிப் பதில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கிய பங்குவகிக்கிறது.
இந்த ஆண்டு 72 மையங் களில் 25,000 ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மில்லியன் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.
தங்களது மதிப்பெண்கள் தவறாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் 50,000 மாணவர் கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட நகலைப் பார்த்தபோதுதான் கூட்டலில் பிழைகள் இருப்பது தெரியவந்தது.
மேலும், சில விடைத்தாள்கள் முறையாகத் திருத்தப்படாமல் மதிப்பெண்கள் வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. 4,500 பேர் மறு மதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்து இருந்த நிலை யில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
ஒரு விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு 4 ஆசிரியர்கள் பொறுப்பேற்கிறார்கள். தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்யப்பட்டு மதிப் பெண்கள் மீண்டும் வழங்கப்பட்டு உள்ளன.
விடைத்தாள் திருத்தம் செய் வதில் ஆசிரியர்கள் தவறிழைத்து இருப்பதை இணை இயக்குநர்கள் கண்டுபிடித்து அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க, முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
தவறிழைத்த 500க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தவறு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
தவறுக்கு காரணமாக உள்ள ஆசிரியர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரம் தெரி விக்கிறது.

