அதிமுகவை நெருக்க ஸ்டாலின் திட்டம்

அதிமுகவை நெருக்க ஸ்டாலின் திட்டம்

2 mins read

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும் அதிமுகவை மிரட்டும் அளவுக்கு திமுக மிகப் பெரிய எதிர்க்கட்சியாக வளர்ந்திருக்கிறது. காங்கிரசோடு சேர்ந்து 109 எம்எல்ஏக்களைக் கொண்ட பெரிய எதிரணி இதற்கு முன்னர் தமிழக சட்டமன்றத்தில் இருந்ததில்லை. இருப்பினும் சின் னஞ்சிறிதாக உள்ள வெற்றிக்கான இடைவெளியைச் சரிக்கட்டி ஆட்சி யைக் கைப்பற்றும் திறன்படைத்த ராஜதந்திரி அந்த அணியிலில்லை.

இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்பது அதிமுக எம்எல்ஏக்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். சூலூர்-கந்தசாமி, பாப்பிரெட்டிப் பட்டி-கோவிந்தசாமி, பரமக்குடி-சதன் பிரபாகர், அரூர்-சம்பத்குமார், சோலிங்கர்-சம்பத்து, விளாத்தி குளம்-சின்னப்பன், நிலக்கோட்டை -தேன் மொழி, மானாமதுரை-நாக ராஜன், சாத்தூர்-ராஜவர்மன் ஆகி யோர் பதவியேற்றதால் அதிமுக வின் பலம் 123 ஆக அதிகரித்துள் ளது.

இருப்பினும் தினகரன், அவரது ஆதரவாளர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு இவர் களோடு கருணாஸ் உள்ளிட்ட மூன்று அதிருப்தியாளர்கள் ஆகி யோரைக் கழித்துவிட்டால் எஞ் சியது 117 எம்எல்ஏக்கள்தான். ஏதேனும் ஓர் அரசியல் சூழ்ச்சியில் கவிழக்கூடிய ஆபத்தைக் கொண் டதாக அதிமுக அரசு உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டா லினுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையில் நட்பு மலருமாயின் அதி முகவுக்குச் சிக்கல்தான். அதற்கு முன்னோடியாக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அமையப்போகிறது. அந்தத் தீர்மா னம் குறித்து நேற்று முன்தினம் செய்தியாளர்கள் கேள்வி எழுப் பியபோது 'பொறுத்திருந்து பாருங் கள்' என்று ஸ்டாலின் கூறியிருக் கிறார்.

அதேநேரம் பெங்களூரு சிறை யில் நேற்று முன்தினம் சசி கலாவைச் சந்தித்து இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பிய டிடிவி தினகரனும் சபா நாயகருக்கு எதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மானம் நிச்சயமாக வரும். அப்போது எங்களது 'ஸ்லீப் பர் செல்'கள் வெளியே வருவார்கள் என்று கூறியிருக்கிறார். எனவே ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி வைத் தியம் காத்திருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை தீர்மானம் வெற்றி பெற்று சபாநாயகர் பதவியிலிருந்து தனபால் இறங்கினால் எதிரணி யினரின் கை ஓங்கும். ஆட்சியைக் கவிழ்க்கும் வாய்ப்பு அப்போது அவர்களுக்குக் கிட்டும். அதற்கு முன்னேற்பாடாக அதிருப்தியில் உள்ள தோப்பு வெங்கடாசலம் போன்ற அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் திமுக தீவிரமாக இறங்கி இருக்கிறது.

ஏற்கெனவே அதிமுகவிலிருந்து திமுகவுக்குத் தாவி பெரிய பதவிகளில் உள்ளோர் மூலமாக வலை விரிப்பு வேலைகள் நடக்கின்றன. இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற இரு எம்எல்ஏக்கள் இதற்கு துணைநிற்கிறார்கள். தின கரன் துணையோடு திமுக தர இருக்கும் நெருக்கடியை அதிமுக எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை ஊடகங்கள் உற்றுநோக்கி வருகின்றன.