சிங்கப்பூரின் பொருளியலும் ஊழி யர் சந்தையும் தேர்ந்த நிலையில் நீடிப்பதால் கடந்த ஆண்டு அதி கமான ஊழியர்கள் சம்பள உயர்வு பெற்றனர். மேலும் ஈராண் டுகளாக இறக்கத்தைச் சந்தித்து வந்த இயல்பான ஒட்டுமொத்த ஊதிய வளர்ச்சியும் வேகமெடுத்து உள்ளது.
அந்த வளர்ச்சி கடந்த ஆண்டு சராசரியாக 4.2 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. 2017ஆம் ஆண் டில் இந்த விகிதம் 3.2 விழுக் காடாக இருந்தது. தனியார் துறையில் ஊதிய விகிதம் 3.8 விழுக்காட்டிலிருந்து 4.6 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.
மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட சம்பள நடைமுறை கள் மீதான அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பேருக்கு வேலை வழங்கும் 5,300 தனியார் நிறுவனங்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த எண்ணிக்கை பெறப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி முதல் இவ்வாண்டு மார்ச் 19ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வுக்கு குறைந்த பட்சம் 10 ஊழியர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டன.
ஆய்வில் பங்கேற்ற நிறுவனங் களில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்ற 584,100 முழு நேர உள்ளூர் ஊழியர்களும் ஓராண்டுக்கும் குறைவாக அல் லது பகுதி நேரமாக வேலை செய்யும் 187,900 ஊழியர்களும் உள்ளனர்.
ஊழியர்கள் கடந்த ஆண்டில் தங்களது அடிப்படைச் சம்பளத் தில் சராசரியாக 2.06 மாதச் சம் பளத்தை போனசாகப் பெற்றார் கள். இதற்கு முன்னர் இது 2.0 மாதங்களாக இருந்தது.
வேலைவாய்ப்பில் வலுவான வளர்ச்சி, குறைவான வேலை யின்மை, சொற்ப ஆட்குறைப்பு ஆகியன காரணமாக சிங்கப் பூரர்களும் நிரந்தரவாசிகளும் கடந்த ஆண்டு சிறந்த ஊதியம் பெற்றார்கள்.
2017ஆம் ஆண்டில் காணப் பட்ட 3.7 விழுக்காட்டு பொருளி யல் வளர்ச்சி கடந்த ஆண்டு 3.1 விழுக்காட்டுக்குச் சரிந்த நிலை யிலும் ஊழியர்கள் பலனடைந்த தாக அமைச்சு சுட்டியது.
லாபம் ஈட்டும் ஆற்றல் மேம் பட்டதால் ஊதிய உயர்வு வழங் கிய நிறுவனங்களின் விகிதம் 65 விழுக்காட்டிலிருந்து கடந்த ஆண்டில் 67 விழுக்காட்டுக்கு ஏறியது.
அதேபோல சம்பளத்தை வெட் டிய நிறுவனங்களின் விகிதாச் சாரம் 12 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காட்டுக்கு இறங்கியது.
ஒட்டுமொத்தமாக சம்பள அதி கரிப்பைப் பெற்ற ஊழியர்களின் விகிதம் 78 விழுக்காட்டிலிருந்து 81 விழுக்காட்டுக்கு அதிகரித்து விட்டது. அவர்களின் சராசரி சம்பள உயர்வின் விகிதமும் 5.1 விழுக்காட்டில் இருந்தது 5.8 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.
இருந்தபோதிலும் கடந்த ஆண்டு சம்பள வெட்டும் அதிக மாக இருந்தது.
2017ஆம் ஆண்டு 3.9 விழுக்காடாக இருந்த சம்பள வெட்டு கடந்த ஆண்டில் 4.3 விழுக்காட்டுக்கு அதிகரித்ததாக அமைச்சின் அறிக்கை தெரி விக்கிறது.
இதற்கிடையே, முதலாளிகள் தங்களது நிறுவனத்தின் நல்ல நிலைமைக்கு ஏற்ப தொழி லாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குகிறார்களா என்பதை தொழிற்சங்கங்கள் அணுக்க மாகக் கண்காணிக்க வேண்டும் என தேசிய தொழிற்சங்க காங் கிரசின் உதவி தலைமைச் செய லாளர் பேட்ரிக் டே வலியுறுத்தி உள்ளார்.

