'மக்களை முதலில் கவனியுங்கள்'

'மக்களை முதலில் கவனியுங்கள்'

2 mins read

புதுடெல்லி: உங்களை முழு மனதாக நம்பி எம்பியாகத் தேர்ந் தெடுத்து மக்களவைக்கு‌ அனுப்பி வைத்துள்ள சிவகங்கை தொகுதி மீதும் அத்தொகுதி மக்கள் மீதும் முழு கவனத்தைச் செலுத்தி அவர்களுக்கு நல்லதை செய்யுங் கள் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று ரூ.10 கோடியை வைப்புநிதியாக செலுத்திவிட்டு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்றுவந்தார்.

இந்நிலையில் தான் செலுத்திய தொகையைத் திருப்பித் தரக்கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 'முதலில் உங்கள் தொகுதி மக்களைச் சென்று கவனியுங்கள்' என்று அறிவுறுத்தியது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப் போது, "பணத்தை எல்லாம் திரும் பத் தரமுடியாது. ஏன் அந்த ரூ.10 கோடி மேல் இவ்வளவு கவனம் செலுத்துகிறீர்கள். நீங்கள் போய் உங்கள் தொகுதியைக் கவனி யுங்கள். ஒவ்வொரு முறை நீங்கள் வெளிநாடு செல்லும்போதும் ரூ.10 கோடி வைப்புத்தொகை செலுத்த வேண்டும். பின்னர் நாங்கள் அதை திருப்பியளிப்போம். அடுத்த முறை நீங்கள் செல்லும்போது நாங்கள் ரூ.20 கோடி பிணையாகக் கேட்கலாம்," என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கார்த்தி சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல்- மேக் சிஸ் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் பாரம்பரிய கோட்டையாகத் திகழ்ந்து வரும் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனாவார்.