ஒருவரை ஒருவர் ஏமாற்றியதாக பாமக-தேமுதிக மோதல்

ஒருவரை ஒருவர் ஏமாற்றியதாக பாமக-தேமுதிக மோதல்

1 mins read

சென்னை: வாக்களிக்காமல் ஒரு வரை ஒருவர் கூட்டணி கட்சிக் குள்ளேயே ஏமாற்றி உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது குறித்து பாமக-தேமுதிக கட்சியினரிடையே விவாதம் வலுத்து வருகிறது.

தேமுதிக கட்சியினர் பாமக வினருக்கு வாக்களிக்காமல் ஏமாற்றி உள்ளதாகவும் பாமக வினர் தேமுதிகவினருக்கு வாக் களிக்காமல் ஏமாற்றி உள்ள தாகவும் மோதல் வெடித்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் இரு கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. ஆனால், இத் தேர் தலில் இரு கட்சிகளும் மீண்டும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

தர்மபுரி தொகுதியில் அன்பு மணியும் கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் சுதீ‌ஷும் தோல்வி அடைந்ததை இரண்டு கட்சியினராலும் ஜீரணிக்க முடியாமல் இன்னும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இருவருமே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்ள நினைத்ததால் தோல்வி ஏற்பட்டதாக இரு கட்சி யினரும் பேசத் துவங்கி உள்ளனர். இது தொடர்பான மோதல் சமூக வலைத்தளங்களில் நாளும் பெருகி வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் கூட் டணியைத் தொடர இரு கட்சி யினரும் முடிவெடுத்துள்ளனர். அதேநேரம் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் சமூக வலைத் தளங்களில் மோதிக்கொள்வது இரு கட்சிகளின் தலைமைக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள தாகவும் கூறப்படுகிறது.