சென்னை: நடந்து முடிந்த தேர்தலில் அதிகமாக உழைத்த உதயநிதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்றும் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்குமாறும் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு மாவட்டச் செயலாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், திமுகவில் இதுவரை எந்தப் பொறுப்பிலும் இல்லாத உதயநிதியை எடுத்த எடுப்பிலேயே இளைஞரணி செயலாளர் என்ற செல்வாக்குமிக்க பதவியில் அமர்த்தினால் குடும்ப அரசியல் என்ற விமர்சனம் எழக்கூடும் என சில மூத்த தலைவர்கள் கருதுவதாகப் பேசப்படுகிறது. ஸ்டாலின் முதலமைச்சராகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் உதயநிதி கட்சிப் பதவிக்கு வந்தால் நல்லது எனக் கட்சியின் மூத்த தலைவர்கள் யோசனை கூறுவதாகவும் தெரிகிறது.

