சென்னை: மேலவை எம்பி பதவி தந்தால் அமமுகவை உடைக்கவும் அதிமுகவில் இணையவும் தயாராக இருப்பதாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமமுக கொள்கை பரப்புச் செயலர் தங்கதமிழ்செல்வன் தூது விடுத்துள்ளார்.
மேலவை எம்.பி. பதவி தரும்பட்சத்தில் அமமுகவில் உள்ள தன் ஆதரவாளர்களை அதிமுகவிற்கு அழைத்து வருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் அமமுக பொதுச்செயலர் தினகரன் "யார் விரும்பினாலும் போகலாம். பத்துப் பேர் செல்வதால் அமமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. செந்தில்பாலாஜி, திமுகவில் இணைந்தது அவரது புத்திசாலித்தனம்," என கூறியிருந்தார்.

