எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான்சென்னை: பதவி என்பதெல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான் மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பளித்தால் பங்கேற்பது குறித்துக் கட்சி தலைமை முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார்
தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாகப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிலையில் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்ச் செல்வம் மற்றும் அமைச்சர்கள், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழன், செங்கோட்டையன் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "பதவி என்பது எப்போதும் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான். மத்திய அமைச்சரவையில் பா.ஜ.க வாய்ப்பளித்தால் இடம்பெறுவது குறித்துக் கட்சித் தலைமை முடிவு செய்யும்," என்றார்.
"அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக டெல்லியில் அதிமுக இரு அணிகளாக முகாமிட்டிருப்பதாகவும் அமைச்சர் பதவிக்கு அதிமுகவிற்குள் போட்டி நிலவுவதாகவும் ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் கற்பனையானது," என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

