அனுமதியின்றி பேரணி: கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர் மீது வழக்கு

அனுமதியின்றி பேரணி: கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர் மீது வழக்கு

1 mins read

சென்னை: ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது, தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை தேனாம்பேட்டை 'ஏஜிடிஎம்எஸ்' மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து காமராஜர் அரங்கம் வரையில் நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. பேரணியில் திருநாவுக்கரசர் எம்பி, எச்.வசந்தகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், வசந்தகுமார் உள்ளிட்ட 500 பேர் மீது தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்ப திவு செய்துள்ளனர். சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.