சென்னை: தமிழகத்தில் 9,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
"பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டதே இந்த வறட்சி. குடிநீர் தொடர்பாக அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோ சித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று செய்தி யாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

