சென்னை: சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய்க் கட்டியை அகற்றி ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் அப்துல் காதர், கடந்த 10 ஆண்டுகளாக இடது தொடையில் பெரிய கட்டியுடன் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தக் காலை முழுமையாக அகற்றினால்தான் சிகிச்சை செய்யமுடியும் என பல மருத்துவமனைகள் கூறி கைவிட்ட நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
மார்ச் 15ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. புற்றுநோய் கட்டிகளுக்கு ரேடியோ, கீமோ தெரப்பிகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்தும் நிலையில், முதல்முறையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றி ஸ்டான்லி மருத்துவமனை சாதனை செய்ததாக மருத்துவ மனை முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம் கூறியுள்ளார்.

