தமிழக அரசு மேல்முறையீடு

தமிழக அரசு மேல்முறையீடு

1 mins read

சேலம்: சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கான அறிவிப்பாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை மறுநாள் ஜூன் 3ஆம் தேதி விசாரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சேலம்-சென்னை வரை ரூ.10,000 கோடி செலவில் 276 கி.மீ. தொலைவுக்கு 8 வழிகள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

நில அளவீட்டுப் பணியின் போது அதை எதிர்த்து விவ சாயிகளும் பொதுமக்களும் போராட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையே, இத்திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தடை விதிக்கக் கோரியும் 50க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி தீர்ப் பளித்த சென்னை உயர் நீதி மன்றம், இத்திட்டத்துக்கான அறிவிப்பாணையை ரத்து செய்தது.