பேரையூர்: தமிழ்நாட்டின் பல பகுதி களிலும் பெண்கள் ஆட்டோ, வாடகை டாக்சிகளை ஓட்டிச் செல்வதைக் காணமுடியும். இது போல் இப்போது இந்தப் பெண் களின் பட்டியலில் செல்லம்மாள் என்ற பெண்ணும் சேர்ந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநர் உரிமம் பெற்ற செல்லம் மாள் முதலில் சிறிய ரக வாக னங்களையே இயக்கினார்.
நாளடைவில் வருமானத்திற் காக கனரக வாகனங்களை ஓட்ட ஆரம்பித்தார். தற்போது 10 டயர் கொண்ட 'டாரஸ்' கனரக லாரியை இந்தியா முழுவதும் ஓட்டி வலம் வந்து கொண்டிருக்கிறார் 48 வயது செல்லம்மாள்.
இலகுவான வேலைகளையே பெண்களால் செய்யமுடியும், கடினமான வேலைகளைச் செய்ய முடியாது என்று பேசி வந்தவர் களின் வாயை அடைத்துள்ளார் வசந்தகுமாரி.
இவர் கன்னியாகுமரி மாவட் டத்தில் அரசுப் பேருந்தை ஓட்டி பல பெண்களுக்கும் முன்மாதிரி யாகத் திகழ்கிறார்.
இதன் பயனாக இன்று நகரின் பல இடங்களிலும் ஆட்டோவை பெண்கள் ஓட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மேற்கு ராஜ பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ரெங்கையாவின் மனைவி செல்லம்மாள். இவர் களுக்கு இரு மகன்கள்.
கணவர் உடல்நலம் குன்றிய தால் குடும்ப பாரத்தை ஏற்ற செல் லம்மாள் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் காஷ்மீர், உத்தரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் நான் சரக்கு வாகனங்களைத் தைரியமாக ஓட்டிச்சென்று வருகிறேன்.
"அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையினரும் போக்கு வரத்து அதிகாரிகளும் எனக்குப் பக்கபலமாக உள்ளனர். என் னைப்போல நிறைய பெண்கள் ஓட்டுநராக உருவாகவேண்டும். அப்போதுதான் இந்தச் சமுதாயம் நன்கு முன்னேறும்," என்கிறார்.

