சென்னை: தமிழகத்தில் 19 உயர் காவல்துறை அதிகாரிகளை முதல மைச்சர் எடப்பாடி இட மாற்றம் செய்துள்ளார்.
* தொழில்நுட்பப் பிரிவு டிஜிபி தமிழ்செல்வன் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு டிஜிபி கரண் சின்ஹா மாநில குற்ற ஆவணக் காப்பக டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.
* சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகப் பணியாற்றிய ஜாங்கிட் கும்பகோணத்தில் உள்ள மாநில போக்குவரத்துக்கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகப் பொறுப்பு ஏற்பார். இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது ஆகும்.
* தமிழக தேர்தல் பிரிவு டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாகப் பொறுப்பு ஏற்பார்.
* சட்டம்=ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபியாகப் பணியாற்றிய விஜய்குமார் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால், தலைமையகக் கூடு தல் டி.ஜி.பி.யாகப் பதவி ஏற்பார்.
* தலைமையக கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் தனி பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த அருணாச்சலம் ஓய்வு பெற்றார். * ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. ஷகீல் அக்தர், மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.
* பாஷ் குமார் சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார். * சந்தீப் ராய் ரத்தோர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சுனில் குமார் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புத் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகப் பொறுப்பு ஏற்பார்.
* அசோக்குமார் தாஸ் தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டிஜிபியாகப் பதவி ஏற்பார்.
* லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநர் ஜெயந்த் முரளி தமிழக சட்டம் = ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
செந்தாமரைக்கண்ணன் தலைமையக ஐ.ஜி.யாகப் பொறுப்பு ஏற்பார்.
ஜெயலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சென்னை மாநகர துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள் ளது.

