தமிழக அரசு ஊழியர்களுக்கு உடை கட்டுப்பாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு உடை கட்டுப்பாடு

1 mins read

சென்னை: தமிழக தலைமைச் செயலக அரசு ஊழியர்களுக்கான பணியாளர் கையேட்டில், உடைகள் குறித்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் நேர்த்தியான, சுத்தமான உடைகளை அணிய வேண்டும். அலுவலகத்தின் நன்மதிப்பைப் பராமரிக்கும் வகையில் உடைகள் இருக்க வேண்டும்.

பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டும் அணிய வேண்டும். சேலையைத் தவிர மற்ற உடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிவது அவசியம். உடைகளின் நிறம் மெல்லிய வண்ணமாக இருக்க வேண்டும்.

ஆண் பணியாளர்கள் அனைவரும் பேண்ட் மற்றும் சட்டை அணிய வேண்டும். டீ=சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது. நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் முன்னிலையா கும்போது ஆண் ஊழியர்களாக இருந்தால் முழு நீளம் கொண்ட கோட்டுகளை டையுடன் அணியவேண்டும்.

அந்த ஆடைகள் மெல்லிய வண்ணத்தில் இருக்க வேண்டும். அடர் வண்ணத்துடன் உள்ள கண்ணைப் பறிக்கும் நிறத்தில் இருக்கக்கூடாது.

நீதிமன்றங்களில் பெண் ஊழியர்கள் முன்னிலையாகும்போது, சேலை அல்லது சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் அணிந்துசெல்ல வேண்டும்.

சேலையைத் தவிர மற்ற உடையுடன் மெல்லிய வண்ண துப்பட்டாவையும் அணிந்திருக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்­ளது.